Reading Time: < 1 minute
திங்கள்கிழமை இரவு நோர்த் யோர்க் பிளாசாவில் நடந்த ஒரு பயங்கரமான துப்பாக்கிச் சூட்டில் தேடப்பட்ட சந்தேக நபர் காரொன்றையும் கணவாடி அங்கிருந்து தப்பிச்சென்றதாக ஒரோன்டோ பொலிசார் கூறுகின்றனர்.
அதிகாரிகள் முதலில் ஜேன் தெரு மற்றும் வில்சன் அவென்யூவிற்கு அருகிலுள்ள ஷெரிடன் மாலுக்கு இரவு 8:30 மணியளவில் அழைக்கப்பட்டனர். ஷாப்பிங் செய்தபோது நபர் ஒருவர் துப்பாக்கியால் தாக்கப்பட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அந்த கொலை சம்பவத்துக்காக தேடப்பட்டு வந்த சந்தேகநபர், அங்கிருந்த வணிக வளாகத்தின் வாகன நிறுத்துமிடத்தில் டொயோட்டா கொரோலா காரைத் திருடிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பிலான தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் பொலிசார் கூறியுள்ளனர்