Reading Time: < 1 minute

உலகின் பல்வேறு நாடுகளில் பருவ கால மாற்றத்திற்கு ஏற்ற வகையில் நேர மாற்றங்கள் அறிமுகம் செய்யப்படுவது வழமையானது.

அநேக சந்தர்ப்பங்களில் பகல் நேரத்தை சேமிக்கும் வகையில் இவ்வாறு நேரமாற்றம் அறிமுகம் செய்யப்படுகின்றது.

எவ்வாறு எனினும் இந்த நேர மாற்றங்கள் மனித உடலுக்கு ஆபத்தானது என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.

நேர மாற்றத்தின் போது குறிப்பிட்ட நேரத்திலிருந்து முன் நோக்கியோ அல்லது பின்னோக்கியோ நேரம் நகர்த்தப்படுகின்றது.

நாடுகளின் தேவைக்கு ஏற்றவாறு பொதுவாக ஒரு மணித்தியாலம் முன்னோக்கியோ அல்லது பின்னோக்கியோ நகர்த்தப்படுகின்றது.

இவ்வாறு நேரமாற்றம் அறிமுகம் செய்யப்படுவதனால் மக்கள் பாதிக்கப்படுவுதாக பிரித்தானிய ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியாவின் நித்திரை சார் ஆய்வு நிறுவனத்தின் ஆய்வாளர்கள் இந்த விடயம் தொடர்பில் ஆய்வு நடத்தியுள்ளனர்.

இவ்வாறு நேர மாற்றம் மேற்கொள்ளப்படுவதனால் மக்கள் தங்களது நித்திரை முறையில் மாற்றத்தை எதிர் நோக்க நேரிடுகின்றது என தெரிவிக்கப்படுகிறது.

இது பல்வேறு ஆரோக்கிய கேடுகளை உருவாக்கும் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.