கனேடிய பொதுத் தேர்தல் திகதியை மாற்றியமைக்குமாறு மத்திய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், நீதிமன்ற கட்டளைக்கு ஏற்றவாறு கனேடிய தேர்தல் திணைக்களம் தனது முடிவினை விரைவில் அறிவிக்கும் என தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலும், மத்திய பொதுத் தேர்தலில் அனைத்துக் கனேடியர்களும் வாக்களிப்பதற்கான வாய்ப்பினைப் பெற்றுக்கொள்வதை உறுதிப்படுத்தும் பொறுப்பு தமக்கு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் கனேடிய பொதுத் தேர்தல் இடம்பெறுவதாக காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ள போதும், அந்தக் காலப்பகுதியில் யூதர்களுடைய விடுமுறை வருவதனால், தேர்தல் திகதியை மாற்றியமைப்பது குறித்து கனேடிய தேர்தல் தலைமை அதிகாரி பரிசீலித்து வருவதாக கூறப்படுகின்றது.
கனேடிய மத்திய அரசின் சட்ட திட்டங்களுக்கு ஏற்ப, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
ஆனால், ஒக்டோபர் 21ஆம் திகதி யூதர்களுடைய முக்கிய விடுமுறை நாளும் வருகிறது. குறித்த நாளில் யூதர்கள் வேலைசெய்வதோ, வாக்களிப்பதோ இல்லை எனவே. இதனால் தேர்தல் திகதியை மாற்றியமைக்க திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.