கனடாவில் நீண்ட இடைவெளியின் பின்னர் பணவீக்கம் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
கடந்த மார்ச் மாதத்தில் பணவீக்கம் 4.3 வீதமாக பதிவாகியுள்ளது. கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் பணவீக்கம் 5.2 வீதமாக காணப்பட்டது. இந்த ஆண்டின் நடுப்பகுதியில் பணவீக்க வீதத்தை 3 வீதமாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின் பின்னர் முதல் தடவையாக வருட வட்டி வீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.
உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரித்துச் செல்லும் போக்கினை பதிவு செய்தாலும், ஆண்டு ரீதியான கணிப்பின் போது சிறிதளவு வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
நாட்டில் தொடர்ச்சியாக வட்டி வீதம் வீழ்ச்சியடைந்து செல்லும் எனவும், 2 வீதமாக பதிவாகும் வரையில் தொடர்ச்சியாக அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் கனடிய மத்திய வங்கி தெரிவித்துள்ளது.