அண்மையில் பாரிய நில அதிர்வினால் பாதிக்கப்பட்ட மொரோக்கோ மக்களுக்கு பல்வேறு வழிகளில் கனடிய மக்கள் உதவிகளை வழங்கி வருகின்றனர்.
தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அறக்கட்டளைகள் மற்றும் கனடிய அரசாங்க தரப்பினர், தனிப்பட்ட நபர்கள் என பல்வேறு தரப்பினரால் மொரக்கோ மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
6.8 ரிச்டர் அளவில் பதிவான நில அதிர்வு காரணமாக சுமார் 2900 பேர் பலியாகியிருந்ததுடன், ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்திருந்தனர்.
மொரக்கோவின் மார்க்கேச் என்ற தென்பகுதி நகரமே நில அதிர்வு காரணமாக மோசமாக பாதிக்க பாதிக்கப்பட்டிருந்தது.
பாதிக்கப்பட்ட மக்களுக்காக மூன்று மில்லியன் டாலர் பெறுமதியான உதவிகளை வழங்குவதாக கனடிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சங்கங்களின் ஊடாக இந்த உதவிகள் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இரண்டு மில்லியன் டாலர்கள் பெறுமதியான அவசர நிவாரண உதவிகளையும் கனடா வழங்குவதாக அறிவித்துள்ளது.
இதற்கு மேலதிகமாக கியூபெக் மொன்றியால் உள்ளிட்ட மாகாணங்களும் மொரக்கோ மக்களுக்கு உதவிகள் மற்றும் நிவாரணங்களை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.