Reading Time: < 1 minute
கனடாவின் நியூபிரவுன்ஸ்விக் மாகாணத்தில் முதல் பெண் முதல்வர் என்ற வரலாற்று சாதனையை லிபரல் கட்சியின் சூசன் ஹோல்டு படைக்க உள்ளார்.
நியூ பிரவுன்விக் மாகாணத்தில் இதுவரையில் பெண் ஒருவர் முதல்வர் பதவிக்கு அமர்த்தபட்டதில்லை.
அண்மையில் நடைபெற்ற மாகாண தேர்தலில் சூசன் ஹோல்ட் தலைமையிலான லிபரல் கட்சி அதிக ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.
சூசனின் தலைமையிலான லிபரல் கட்சி மொத்தமாக 31 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.
முற்போக்கு கன்சர்வேட்டிவ் கட்சி 16 ஆசனங்களையும் பசுமை கட்சி இரண்டு ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன.
இதன்படி மாகாணத்தின் வரலாற்றில் முதல் பெண் முதல்வராக சூசன் பதவி ஏற்க உள்ளார்.
வீடமைப்பு கல்வி சுகாதாரம் ஏனைய சேவைகள் என்பனவற்றை மக்களுக்கு திருப்தியான வகையில் வழங்குவதற்கு அர்ப்பணிப்புடன் செயல்பட உள்ளதாக சூசன் தெரிவித்துள்ளார்.