நிதி நெருக்கடியில் தத்தளிக்கும் பெரு நிறுவனங்களுக்கு அவசரக்கால நிதியுதவி வழங்கவுள்ளதாக கூட்டாட்சி அரசு தெரிவித்துள்ளது.
‘பெரு நிறுவனங்களுக்கான அவசரக்கால நிதி வசதி’ என்று அழைக்கப்படும் இந்த திட்டம், பெரிய நிறுவனங்கள் தங்கள் செயற்பாடுகளைத் தொடரவும், தொழிலாளர்களை ஊதியத்தில் தக்க வைத்துக் கொள்ளவும், நெருக்கடியை தவிர்க்கவும் கூடுதல் பணப்புழக்கத்தை அணுகவும் அனுமதிக்கும்.
300 மில்லியன் டொலர்கள் அல்லது அதற்கும் அதிகமான தொகையை ஆண்டு வருமானமான பெறும் நிறுவனங்கள், அரசின் நிதியுதவியினை பெற தகுதியான நிறுவனங்களாக கருதப்படுகின்றது.
குறித்த நிறுவனங்கள், 60 மில்லியன் அல்லது அதற்கு மேற்பட்ட டொலர்களுக்கு நிதியுதவி பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதித்துறையில் உள்ள வணிகங்கள், கடந்த காலங்களில் வரி ஏய்ப்பு செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட எந்தவொரு நிறுவனமும் தகுதி பெறாது.
அதேபோல், ஒரு வணிக கடன் கிடைக்கும் திட்டத்தின் மூலம், 100 மில்லியன் டொலருக்கும் அதிகமான வருவாயைக் கொண்ட மத்திய சந்தை நிறுவனங்களுக்கு ஒரு நிறுவனத்திற்கு 12.5 மில்லியன் டொலர்கள் முதல் 60 டொலர் மில்லியன் வரையிலான கடன்களும், 80 மில்லியன் டொலர்கள் வரை நிதி உத்தரவாதங்களும் வழங்கப்படுகின்றன.