கனடியர்கள் அதிக அளவு கடன் பெற்றுக் கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு காரணமாக கூடுதல் அளவில் கடன் பெற்றுக் கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் இக்குபெஸ் அண்ட் ட்ரான்ஸ் யூனியன் என்ற நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அதிக அளவான கடன் பெறுகையானது கடன் மற்றும் கடன் அட்டை கொடுப்பனவுகளை தவறவிடச் செய்வதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 202 இந்த ஆண்டின் மூன்றாம் காலண்டு பகுதியில் வாடிக்கையாளர்களின் கடன் தொகை 2.5 ட்ரில்லியன் டொலர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இது கடந்த ஆண்டு மூன்றாம் காலாண்டுடன் ஒப்பீடு செய்யும் போது 4.1 வீத அதிகரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
அதிக அளவுத் தொகையை கடன் பெற்றுக் கொள்வது கடன் தவணைகளை உரிய நேரத்தில் செலுத்த முடியாத நிலையை உருவாக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
உரிய நேரத்தில் கடன் செலுத்துவது தவறவிடப்பட்ட சந்தர்ப்பங்கள் 2 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது.
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு வட்டி வீத அதிகரிப்பு போன்ற காரணிகளினால் இவ்வாறு கடன் பெரும் அளவு அதிகரித்துள்ளதாகவும் கடன் செலுத்துவதில் தாமதங்கள் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.