Reading Time: < 1 minute
கனடாவில் நாய் ஒன்றை தாக்கியதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நபரையே அந்த தாக்குதல் தொடர்பிலான சந்தேகத்தில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ரொறன்ரோவின் ரோஸ்டேல் வீதிக்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நபர் ஒருவர் இரண்டு கத்திகளைக் கொண்டு தனது நாயை பல தடவைகள் தாக்கியதாக தொலைபேசி ஊடாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நடை பயிற்சிக்கு சென்ற போது இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்த நாய்க்கு மிருக வைத்தியசாலையில் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.
தாக்குதல் நடத்தியவர் தொடர்பில் வழங்கப்பட்ட தகவல்கள் போலியானவை என விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
முறைப்பாட்டை மேற்கொண்ட நபரே நாயை தாக்கியமை கண்டறியப்பட்டதனைத் தொடர்ந்து பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.