கடந்த 8 ஆண்டுகளாக கனடாவில் தங்கி பணியாற்றிவரும் கென்ய நாட்டவரான சமையற்கலைஞர் ஒருவர் புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை அடுத்து வெளியேற்றப்படவிருக்கிறார்.
கென்ய நாட்டவரான ஜான் முல்வா ஹாமில்டன் பகுதியில் வசிக்கும் கென்ய சமூக மக்களுக்கு நன்கு அறிமுகமானவர். அவர்களுக்காகவே உழைத்து வருபவர். அவர் இனி ஹாமில்டன் பகுதியில் இரண்டு வாரங்கள் மட்டுமே காணப்படுவார்.
2014 முதல் தமது சொந்த வீடு என கூறி வரும் ஹாமில்டன் பகுதியில் இருந்து ஜனவரி 28ம் திகதி கென்யாவுக்கு திரும்ப இருக்கிறார். தமது உயிருக்கு ஆபத்து அல்லது அச்சுறுத்தல் இருப்பதாக நம்பப்படும் கென்யாவுக்கே அவர் திரும்புகிறார்.
கனடாவில் இருப்பதே பலமென கூறும் அவர், கென்யாவுக்கு திரும்பினால் கண்டிப்பாக தாம் கொல்லப்படலாம் என்கிறார். 2014ல் கனடாவில் குடிபெயர்ந்ததும் அவருக்கு அகதிகள் அந்தஸ்து வழங்கப்பட்டது.
ஆனால் விசாரணை முன்னெடுக்கப்பட்ட பின்னர் அகதிகள் அந்தஸ்து மறுக்கப்பட்டது. தொடர்ந்து நான்குமுறை மேல்முறையீடு செய்தும் கனேடிய நிர்வாகம் நிராகரித்துள்ளது.
கென்யாவுக்கு திரும்ப செல்வது ஒன்றும் அவ்வளவு எளிதானதல்ல என கூறும் முல்வா, உள்ளூர் பூர்வகுடியினருக்கு இடையிலான நில மோதல்கள் தம்மை ஊருக்கு ஊர் இடம் மாற செய்தாக குறிப்பிட்டுள்ளார்.
உயிரை காத்துக்கொள்ளும் பயணமாகவே அது இருந்தது எனவும் முல்வா குறிப்பிட்டுள்ளார். எனது வீடு தீக்கிரையாக்கப்பட்டது, குடும்பத்தை இழந்தேன், இதனால் தான் நான் நாட்டைவிட்டு வெளியேறினேன் என்றார்.
சமையற்கலைஞராக பணியாற்றி வந்த தாம், சில மாதங்களுக்கு ஒருமுறை நாடு திரும்பினால், அங்குள்ள கலவரங்கள் தம்மை இனி ஊருகே திரும்ப வேண்டாம் என எச்சரிக்கும் என்றார்.
இந்த நிலையில் தான் கனடாவில் அடைக்கலம் கோரும் முடிவுக்கு வந்ததாக முல்வா குறிப்பிட்டுள்ளார். தற்போது, நீண்ட 8 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் தாம் அந்த கலவர பூமிக்கு திருப்பி அனுப்பப்படுவதாக முல்வா கவலை தெரிவித்துள்ளார்.