Reading Time: < 1 minute

ஒமிக்ரோன் திரிபு குறித்து விவாதிப்பதற்காக, அவசரமாக நாடாளுமன்ற கூட்டத்தைக் கூட்டுமாறு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் (Justin Trudeau) கனடாவின் கொன்சர்வேட்டிவ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

கோவிட் தொற்றின் தொடர்ச்சியான பரவலை சமாளிப்பதற்கான கனேடிய அரசின் திறன் குறித்து ஆராய, இந்த அவசரக் கூட்டத்தைக் கூட்டுமாறு கொன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் எரின் ஓ டூல் (Erin O’Toole) வலியுறுத்தியுள்ளார்.

அதிகளவு தொற்றுகள் பதிவாகின்ற போதிலும், தொடர் கட்டுப்பாடுகளின் கீழ் 2022ஆம் ஆண்டை ஆரம்பிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் காரணமாக மில்லியன் கணக்கான கனடியர்கள் நிச்சயமற்ற நிலையை எதிர்கொள்கின்றனர் என்றும், அவர் தெரிவித்துள்ளார்.