நயகரா நீர் வீழ்ச்சிக்கு அருகாமையில் அமைந்துள்ள பள்ளத்தாக்கு ஒன்றில் தாய் ஒருவரும், அவரது ஐந்து வயது மகனும் வீழ்ந்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பள்ளதாக்கில் வீழ்ந்த சம்பவத்தை ஓர் விபத்தாக கருதிவிட முடியாது என பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
தாயும் மகனும் பாதுகாப்பு வேலியில் ஏறி பள்ளதாக்கில் வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு பலர் தகவல் வழங்கியுள்ளனர்.
பள்ளத்தாக்கில் வீழ்ந்த பெண் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்
படுகாயமடைந்த ஐந்து வயது சிறுவன் பள்ளத்தாக்கிலிருந்து மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் இடம்பெற்ற போது அருகாமையில் பெண்ணின் கணவர் உள்ளிட்ட சிலர் இருந்தனர் என பொலிஸார் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.