ஒன்றாரியோ மாகாண தேர்தலில் தோல்வியைத் தழுவிய என்.டி.பி கட்சியின் தலைவி என்ட்ரியா ஹோர்வாத் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ஒன்றாரியோ மாகாண புதிய ஜனநாயக கட்சியின் தலைமை பதவியை கடந்த 13 ஆண்டுகளாக வகித்து வந்த ஹோர்வாத், கண்ணீருடன் பதவியை துறந்தார்.
மற்றுமொரு தேர்தலில் தோல்வியடைந்ததனைத் தொடர்ந்து பதவியை ராஜினாமா செய்வதாக ஹோர்வாத் தெரிவித்துள்ளார்.
மாகாண மக்களுக்கு தொடர்ந்தும் சேவையாற்ற உள்ளதாகவும், கட்சித் தலைமைப் பொறுப்பினை கைமாறுவதே இந்த சந்தர்ப்பத்தில் பொருத்தமான தீர்மானம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கட்சி தேர்தலில் வெற்றியீட்டா விட்டாலும் அதிகாரபூர்வ எதிர்க்கட்சியாக மாகாணசபையில் குரல் கொடுக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்தக் கண்ணீர் கவலையினால் வருவதல்ல எனவும், பெருமிதத்தினால் வரும் கண்ணீர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2007ம் ஆண்டு முதல் ஹோர்வாத் ஹமில்டன் தொகுதியில் வெற்றியீட்டி வருகின்றார், இம்முறை தேர்தலிலும் ஹோர்வாத் வெற்றியீட்டியுள்ளார்.