கனடாவில் காற்றுப்பைகள் மற்றும் டயர்கள் தொடர்பான பிரச்சினைகள் உள்ள 274,737 வாகனங்களை மீளப் பெறுவதாக ஃபோர்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
சிக்கலான காற்றுப்பைகள் (எயார்பேக்) மற்றும் டயர்கள் காரணமாக வட அமெரிக்காவில் கிட்டத்தட்ட 2.6 மில்லியன் ஃபோர்ட் வாகனங்கள் திரும்ப அழைக்கப்படுவதை மோட்டார் நிறுவனம் உறுதிப்படுத்தியது. இதனடிப்படையில், கனடாவில் 274,737 வாகனங்கள் மீளப் பெறப்படுகின்றன.
2006-12 ஃபோர்ட் ஃப்யூஷன், 2007-10 ஃபோர்ட் எட்ஜ், 2007-11 ஃபோர்ட் ரேஞ்சர், 2006-11 மெர்குரி மிலன், 2006-12 லிங்கன் செஃபிர் ஃ எம்.கே.இசட் மற்றும் 2007-10 லிங்கன் எம்.கே.எக்ஸ் வாகனங்களில் கோளாறுகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
காற்றுப்பைகளில் ஒரு கால்சியம் சல்பேட் ஈரமுறிஞ்சி உள்ளது. இது அதிக ஈரப்பதம் மற்றும் வெப்பநிலைக்கு நீண்ட காலத்திற்குப் பிறகு சிதைந்துவிடும்.
இது காற்றுப்பை சிதைவதற்கு வழிவகுக்கும். இது கடுமையான காயம் அல்லது மரணத்தை ஏற்படுத்தக்கூடும்.
இருந்தப் போதிலும், கால்சியம் சல்பேட் ஈரமுறிஞ்சியுடன் ஒரு காற்றுப்பை சிதைந்ததாக எந்த அறிக்கையும் தெரியாது என்று நிறுவனம் கூறுகிறது.