Reading Time: < 1 minute

பிரபல ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், கனடாவின் தொலைதூர பகுதிகளுக்கு இணையச் சேவைகளைக் கொண்டு வருவது உறுதியாகியுள்ளது.

கனேடிய வானொலி-தொலைக்காட்சி மற்றும் தொலைத்தொடர்பு ஆணையம் (சிஆர்டிசி) இதற்கான ஒப்புதலை அளித்துள்ளது.

டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரியான எலன் மஸ்க், ‘ஸ்டார்லிங்க் என’ அழைக்கப்படும் தனது வலையமைப்பு, இணைப்பில் புரட்சியாக இருக்கும் என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்த இணைய சேவை கனேடியர்களுக்கு எப்போது கிடைக்கும் என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனால் நிறுவனம் சில தன்னார்வ வீடுகளில் பீட்டா சோதனைகளைத் தொடங்குகிறது.

கிராமப்புற சமூகங்களில் உள்ளவர்கள் ஸ்பேஸ்எக்ஸின் முன்முயற்சியை ஆதரிக்கின்றனர். ஸ்பேஸ்எக்ஸ் செயற்கைக்கோள்கள் ஒரு பொதுவான தகவல் தொடர்பு செயற்கைக்கோளை விட பூமிக்கு 19,000 கிலோமீட்டர் தொலைவில் சுற்றுகின்றன.