Reading Time: < 1 minute
பொதுத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், தேர்தல் தொடர்பான இணையதள மற்றும் சமூக ஊடக விவாதங்களின் போது, வன்முறையைத் தூண்டும் வகையிலான இனவாத ரீதியான வெறுப்பு பேச்சுக்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸாரின் அறிக்கையொன்று தெரிவிக்கின்றது.
வன்முறையைத் தூண்டும் வகையில் தேசத் துரோகம் மற்றும் துரோகி போன்ற சொற்கள், அதிகம் பயன்படுத்தப்பட்டு வருவதாக குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனைவிட குடியேற்றவாசிகள் குறித்து இனவாத ரீதியான பதிவுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பிரதமர் உள்ளிட்ட கட்சித் தலைவர்களுக்கு சமூக ஊடகங்கள் ஊடாக கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இவ்வாறான வெறுப்பு பேச்சுக்களுக்கெதிராகவும் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸார் எச்சரித்துள்ளனர்.