ஆல்பர்ட்டா பகுதியில் அமைந்துள்ள Banff தேசிய பூங்காவில் மீன் பிடித்த நபருக்கு 6,000 டொலர் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
குறித்த நபர் cutthroat trout எனப்படும் ஒருவகை மீனை சட்டவிரோதமாக பிடித்துள்ளார் என கூறப்படுகிறது. 2019 ஜூலை மாதம் நடந்த இச்சம்பவத்தில் தொடர்புடைய இரு நபர்கள் மீது 2022 பிப்ரவரி மாதம் வழக்கு பதியப்பட்டுள்ளது.
இதில் ஒருவர் அமெரிக்கர் என கூறப்படும் நிலையில், கனேடியரான கிரெக் ஓவன்ஸ் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், இவர்கள் பதிவு செய்த காணொளிகளை உரிய சமூக ஊடகங்களில் இருந்து நீக்க வேண்டும் எனவும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
சம்பவத்தன்று இவர்கள் 8 மீன்களை பிடித்துள்ளதாக கூறப்படுகிறது. cutthroat trout வகை மீன்கள் பாதுகாக்கப்படும் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதால், அந்த மீன்களை பிடிப்பது சட்டவிரோதமாக கருதப்படுகிறது.
இதனையடுத்து, அரசு தரப்பு அவர்களுக்கு 8,000 டொலர்கள் அல்லது மீன் ஒன்றிற்கு 1,000 டொலர்கள் அபராதம் விதிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 6,000 டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், அபராதத் தொகையை 6 மாதங்களுக்கும் செலுத்தவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மட்டுமின்றி சமூக ஊடகங்களில் பதிவேற்றப்பட்டுள்ள தொடர்புடைய காணொளிகளை நீக்கவும், நீக்கியதை உறுதி செய்யும் வகையும் தரவுகளையும் சமர்ப்பிக்க நீதிமன்றம் கோரியுள்ளது.