Reading Time: < 1 minute
தென்மேற்கு லண்டன் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில், ஒருவர் உயிரிழந்துள்ளதாக மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வார்ட்ஸ்வில்லுக்கு அருகிலுள்ள ஜான்ஸ்டன் லைன் மற்றும் மெக்லீன் லைன் இடையே ஹென்றி வீதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த விபத்து சம்பவித்தது.
இந்த விபத்தில் ஒரு வாகனமே தொடர்பு பட்டிருப்பதாகவும், இந்த வாகனத்தை செலுத்திய சாரதியே உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும், இந்த விபத்து எவ்வாறு சம்பவித்தது என்பது குறித்து எவ்வித தகவலையும் வெளியிடாத பொலிஸார், இதுகுறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.