Reading Time: < 1 minute

தென்னாபிரிக்காவில் ஜோன்ஸன் அண்ட் ஜோன்ஸன் நிறுவன கொரோனா தடுப்பூசி போடும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக சுகாதாரத்துறையினர் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

ஜனாதிபதி சிரில் ராமபோசா மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்வேலி மிகைஸ் ஆகியோரும் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

தடுப்பூசி செலுத்திக்கொண்டதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்துதெரிவித்த ஜனாதிபதி சிரில் ராமபோசா, ‘ஜோன்சன் அண்ட் ஜோன்சன் தடுப்பூசி பாதுகாப்பான மற்றும் செயற்திறன் மிக்கதாக விரிவான சோதனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. சுகாதாரப் பணியாளர்களை நோய் மற்றும் மரணத்திலிருந்து இந்த மருந்து பாதுகாக்கும்’ என கூறினார்.

முன்னதாக தென்னாபிரிக்காவில் பரவும் புதியவகை உருமாற்றம் அடைந்த கொரோனா வைரசுக்கு எதிராக ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் அஸ்ட்ராசெனெகா கொரோனா வைரஸ் தடுப்பூசி செயற்படவில்லையென கூறி இந்த தடுப்பூசியை மக்களுக்குப் பயன்படுத்துவதை தென்னாபிரிக்கா முழுமையாக இரத்து செய்தது.

இதற்கு பதிலாக இதுவரை அங்கீகரிக்கப்படாத ஜோன்ஸன் அண்ட் ஜோன்ஸன் நிறுவன கொரோனா தடுப்பூசியை தென்னாபிரிக்கா பயன்படுத்தும் என சுகாதாரத் துறை அறிவித்தது.