Reading Time: < 1 minute

தென்கொரியாவில் வாழ்ந்து வரும் கனடியர்களுக்கு விசேட அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

கனடிய வெளிவிவகார அமைச்சினால் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

தென்கொரியாவில் தற்போது நிலவிவரும் ஸ்திரமற்ற நிலைமைகள் காரணமாக இவ்வாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

தென்கொரியா இடம்பெறக்கூடிய போராட்டங்கள் மற்றும் பேரணிகளை தவிர்க்குமாறும் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்கொரிய ஜனாதிபதி அந்நாட்டில் இராணுவ சட்டத்தை அறிவித்திருந்தார்.

தென்கொரியாவில் தற்போது அரசியல் பதற்ற நிலைமை நீடித்து வருவதாகவும், ஜனாதிபதிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் கருத்து முரண்பாடு நிலவி வருவுதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனவே கனையடியார்கள் மிகுந்த அவதாரத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.