கனடாவில் அமைந்துள்ள சீன, அமெரிக்கத் தூதரகங்கள், தேசிய பாதுகாப்பு மையம் மற்றும் நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்துவதாக மிரட்டல் விடுத்த இளைஞர் ஒருவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கனடாவின் ஒட்டாவாவைச் சேர்ந்த டெனியல் ஹுடோ என்ற 19 வயதான இளைஞர் ஒருவர் மீது பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர்.
கொலை செய்யப் போவதாகவும், தாக்குதல் நடத்தப் போவதாகவும் குறித்த இளைஞர் டுவிட்டர் பதிவுகள் மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பயங்கரவாத தாக்குதல், கொலை மிரட்டல் ள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டுக்கள் குறித்த நபர் மீது சுமத்தப்பட்டுள்ளது.
இந்த அச்சுறுத்தல்களை வெளியிட்ட இளைஞரை கைது செய்த பொலிஸார் பின்னர் நிபந்தனை அடிப்படையில் பிணையில் விடுவித்துள்ளனர்.
இவ்வாறான தாக்குதல் அச்சுறுத்தல்கள் எச்சரிக்கைகளை எளிதில் எடுத்துக்கொள்ள முடியாது எனவும் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.