Reading Time: < 1 minute
துப்பாக்கி வன்முறையை தடுக்கும் பொலிஸாரின் முயற்சியில், 500 இற்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுக்கள் பதிவாகியுள்ளதாக ரொறான்ரோ பொலிஸ்துறை தலைவர் மார்க் சாண்டர்ஸ் தெரிவித்துள்ளார்.
கிட்டத்தட்ட மூன்று மாத திட்டத்தின் பாதி கட்டத்தில் குறித்த குற்றச்சாட்டுக்கள் பதிவாகியுள்ளதாகவும், இதன்போது, 200 கைது சம்பவங்களும் பதிவாகியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதுதவிர நகரம் முழுவதும் இடம்பெற்ற 14 தனி துப்பாக்கி சூட்டு சம்பவத்தில், 17பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீப காலமாக துப்பாக்கி கலாசாரம் பெருகி வருகின்ற நிலையில், பொலிஸாரின் இந்த முயற்சியை பலரும் வரவேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.