துப்பாக்கிகள் ஆயுதங்கள் கிடையாது எனவும் அவை தமது வேட்டையாடும் கருவிகள் என கனேடிய பழங்குடியினத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
கனேடிய சமஷ்டி அரசாங்கம் துப்பாக்கிப் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் உத்தேச சட்டமொன்றை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.
தாக்குதல் துப்பாக்கிகளை தடை செய்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
அரசாங்கத்தின் இந்த துப்பாக்கி வகையீட்டில் பெரும் எண்ணிக்கையிலான துப்பாக்கிகளுக்கு தடை விதிக்கப்பட உள்ளது.
தாங்கள் வேட்டையாடும் துப்பாக்கிகளுக்கு தடை விதிக்கப்படுவதனை ஏற்க முடியாது என பழங்குடியினத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
பெரும் எண்ணிக்கையிலான பழங்குடியின சமூகத்தினர் லிபரல் அரசாங்கத்தின் துப்பாக்கி கட்டுப்பாட்டு சட்டத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
தங்களது உரிமைகளை பாதிக்கும் வகையிலான சட்டத்தினை அரசாங்கம் கொண்டு வர முயற்சிப்பதாக தெரிவித்துள்ளனர்.