இளைஞர்களை சீரழிக்கும் வகையில் தானியங்கி மூலம் மது விற்கப்படுவதை, தமிழ்நாடு அரசு உடனடியாக கைவிட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், டாஸ்மாக் கடைகளில் 21 வயது குறைந்தவர்களுக்கு மது விற்கக்கூடாது என்ற குரல் ஓங்கி ஒலிக்கும் நிலையில், தானியங்கி மூலம் மது விற்பனையை தொடங்கி இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
மாநிலம் முழுவதும் மால்கள் உள்பட 500 இற்கும் மேற்பட்ட இடங்களில் அந்த இயந்திரங்கள் பொருத்தப்பட உள்ளதாக வெளியான தகவல் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், இளைஞர்களின் எதிர்காலத்தையோ, தமிழ்நாட்டின் கலாச்சாரம், பண்பாட்டையோ கருதாமல், வருவாயை மட்டுமே கருதி இதுபோன்ற செயல்களில் திமுக அரசு ஈடுபடுவதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.