Reading Time: < 1 minute

கனேடிய மாகாணமொன்றில்பணியாளர்களுக்குத் தட்டுப்பாடு நிலவும் நிலையிலும், புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த முடிவு செய்துள்ளார், அம்மாகாண பிரீமியர்.

கனடாவில் சிறு தொழில்கள், ஏற்கனவே பணியாளர் தட்டுப்பாடு, நிதி உதவி பிரச்சினை முதலான பிரச்சினைகளில் சிக்கித் தவித்துவருகின்றன என்று கூறியுள்ளது, கனடியன் ஃபெடரேஷன் ஆஃப் இன்டிபென்டன்ட் பிசினஸ் (CFIB) அமைப்பு.

ஆனால், பணியாளர்கள் தட்டுப்பாடு நிலவும் நிலையிலும், புலம்பெயர்தலை கட்டுப்படுத்த திட்டமிட்டுள்ளார் கியூபெக் மாகாண பிரீமியரான François Legault.

கியூபெக் மாகாணத்தில், வேகமாகவும், கணிசமான அளவிலும் தற்காலிக பணியாளர்கள் எண்ணிக்கையை குறைக்க அம்மாகாண அரசு முடிவு செய்துள்ளது.

குறிப்பாக, மொன்றியலில் ஏற்கனவே சுமார் 12,000 தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ள பிரீமியர் Legault, அதனால், கல்வி, சுகாதாரம் மற்றும் குடியிருக்க வீடுகள் ஆகிய சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஆகவே, அடுத்த மாதம், அதாவது, செப்டம்பர் மாதம் முதல், ஆறு மாதங்களுக்கு புதிதாக தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர்கள் பணிக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டார்கள் என்று அவர் கூறியுள்ளார்.

அத்துடன், ஏற்கனவே பணியிலிருப்போரின் பணி புதுப்பித்தல் விண்ணப்பங்களுக்கும் இந்த தற்காலிக தடை பொருந்தும் என்றும் Legault தெரிவித்துள்ளார்.