டொரன்டோ கிழக்கு பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் கற்கும் நான்கு வயது மாணவன் இடைவேளையின் போது தனியாக வீட்டுக்கு நடந்து சென்றுள்ளார்.
பகல் போசன இடைவேளியின் போது இவ்வாறு தனியாக வீட்டுக்கு நடந்து சென்றமை தொடர்பில் கிளன்க்ரோவ் பொதுப் பாடசாலையில் (Glengrove Public School) கற்கும் மாணவரே இவ்வாறு பாடசாலையில் இருந்து பத்து நிமிடங்கள் நடை பயணமாக வீடு நோக்கி சென்றுள்ளார்.
மாணவன் நடந்து வந்த பாதையில் போக்குவரத்து நெரிசல் காணப்படுவதாக பெற்றவர் தெரிவிக்கின்றனர்.
தமது மகன் கடத்திச் செல்லப்பட்டு இருக்கலாம் அல்லது வாகனம் ஒன்றில் மோதுண்டு இருக்கலாம் என சிறுவனின் பெற்றோர் பாடசாலை நிர்வாகம் மீது குற்றம் சுமத்தியுள்ளனர்.
பாடசாலை நிர்வாகத்தின் அசமந்த போக்கினால் மகனுக்கு எது வேண்டுமானாலும் நடந்திருக்கலாம் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
பாடசாலை நிர்வாகத்தின் இந்த செயல்பாடு அதிர்ச்சி அளிப்பதாகவும் நம்ப முடியாத வகையில் காணப்படுகின்றது எனவும் தெரிவிக்கின்றனர்.
ஒரு மாணவனை காணவில்லை என்பது பாடசாலை நிர்வாகத்தினருக்கு தெரிந்திருக்கவில்லை என பெற்றோர் குற்றம் சுமத்துகின்றனர்.
இவ்வாறான சம்பவங்கள் எதிர்வரும் காலங்களில் இடம்பெறுவதை தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தனது பிள்ளைக்கு இது பற்றி தெளிவுபடுத்தியதாகவும் நான்கு வயதான பிள்ளையை குற்றம் சுமத்த முடியாது எனவும் சிறுவனின் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் பாடசாலை நிர்வாகம் பாதிக்கப்பட்ட பெற்றோரிடம் மன்னிப்பு கோரியுள்ளது.
இனி வரும் காலங்களில் இவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெறுவதை தடுக்க சகல நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என பாடசாலை நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.