கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது தனிமைப்படுத்தலின் பின் முதன்முறையாக அமைச்சரவைக் கூட்டத்தை இன்று கூட்டவுள்ளார். கடந்த மார்ச் மாதம் 12ஆம்திகதி முதல் பிரதமர் ட்ரூடோ வீட்டிலிருந்து பணிபுரிகிறார். பிரதமர் ட்ரூடோவின் மனைவி சோஃபிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டபின் 14 நாட்கள் தன்னைதானே ட்ரூடோ தனிமைப்படுத்திக் கொண்டார். அதனைத் தொடர்ந்து அவர் வீட்டிலிருந்தே பணிபுரியத் தொடங்கினார்.
இதேவேளை தொடர்ந்தும் தான் வீட்டிலிருந்தே தொடர்ந்தும் பணிபுரிவார் எனவும், முக்கியமான அமைச்சரவைக் கூட்டங்களில் தான் நேரில் கலந்து கொள்ளப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் கொரோனா தொற்றைக் கையாளுவதற்கான அடுத்த கட்டம் குறித்தும், பொருளாதார தாக்கங்கள் குறித்தும் கலந்தாலோசிக்க உள்ளதாக கனேடிய தகவல்கள் தெரிவித்துள்ளன.