கனடாவில் இயங்கி வரும் பிரதான புகையிலை உற்பத்தி நிறுவனங்கள் தங்களுக்கு எதிராக தண்டனை விதிக்க வேண்டாம் என நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளன.
ஏற்கனவே நீதிமன்றம் பிரதான மூன்று புகையிலை உற்பத்தி நிறுவனங்களுக்கு பெரும் தொகை அபராதங்களை விதித்துள்ளது.
பல பில்லியன் டாலர்கள் பெறுமதியான அபராதம் இவ்வாறு விதிக்கப்பட்டுள்ளது.
புகைப்பிடிப்பவர்கள் மற்றும் அவர்களது உறவினர்களுக்கு இந்த நட்டையீட்டுத் தொகையை வழங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் இந்த சட்ட நடவடிக்கையை இடை நிறுத்துமாறு புகையிலை உற்பத்தி நிறுவனங்கள் கோரியுள்ளன.
ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டிருந்த இடைக்கால தடை உத்தரவை மேலும் நீடிக்குமாறு குறித்த புகையிலை உற்பத்தி நிறுவனங்கள் கோரியுள்ளன.
ஒன்றாரியோ நீதிமன்றில் குறித்த நிறுவனங்கள் இது தொடர்பிலான மனுவை தாக்கல் செய்துள்ளன.
உலகின் முன்னணி புகையிலை உற்பத்தி நிறுவனங்களான ரோத்மான்ஸ் பென்சன் அண்ட் ஹெட்ஜஸ், இம்பீரியல் மற்றும் மெக்டொனால்ட் கோர் ஆகிய நிறுவனங்கள் இந்த கோரிக்கையை விடுத்துள்ளன.
தங்களுக்கு எதிரான தீர்ப்பினை எதிர்வரும் மார்ச் மாதம் 25ஆம் திகதி வரையில் நீடிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கையை பரிசீலனை செய்யும் நடவடிக்கை எதிர்வரும் 31ஆம் திகதி வரையில் ஒத்தி வைக்கப்படுவதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.