அஸ்ட்ராஜெனெகா கோவிட் -19 தடுப்பூசி போட்டுக் கொண்ட பின்னர் அரிதான இரத்த உறைவு சிக்கலால் பாதிக்கப்பட்ட மூன்றாவது நபர் கனடா – கியூபெக் மாகாணத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த பெண் உடல் நிலை சீராக உள்ளது. உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என சுகதார அமைச்சு நேற்று சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஸ்ட்ராஜெனெகா கோவிட் -19 தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களிடையே இவ்வாறான இரத்த உறைவுச் சிக்கல் மிக அரிதாகவே காணப்படுகிறது. இந்தத் தடுப்பூசி போட்ட 100,000 பேரில் ஒருவர் என்ற அடிப்படையிலேயே பாதிப்பு இணங்காணப்படுகிறது எனவும் சுகாதர அமைச்சு கூறியுள்ளது.
ஏப்ரல் 30 வரை, கியூபெக்கில் 5 இலட்சத்துக்கும் மேற்பட்ட அஸ்ட்ராஜெனெகா (கோவிஷீல்ட்) தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.
கடந்த வாரம், அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி பெற்று 54 வயது பெண் ஒருவர் இரத்த உறைவுச் சிக்கலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக கியூபெக் பொது சுகாதார துஐற தலைவர் ஹொராசியோ அருடா தெரிவித்தாா்.
இந்த பெண்ணின் மரணத்தைத் தொடர்ந்து அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள மக்கள் தயங்கக் கூடும் என பொது சுகாதார வல்லுநர்கள் கவலை கவலை தெரிவித்தனர்.
அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி தடுப்பூசி போட்ட பின்னர் இரத்த உறைவுச் சிக்கல் ஏற்படுவது மிக அரிதானது. இந்தத் தடுப்பூசியால் ஆபத்துக்களை விட நன்மைகளே அதிகம் எனவும் அவா்கள் தெளிவுபடுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.