Reading Time: < 1 minute

ஏப்ரல் மாதம் முதல் தடுப்பூசி போடும் இடமாக நடத்த வொண்டர்லேண்ட் பூங்காவின் நிர்வாகம் உள்ளூர் சுகாதார அதிகாரிகளுடன் கலந்துரையாடி வருகிறது.

இந்த தளம் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இயங்கும் என்றும், இது கோடை மாதங்களுக்கும் நீட்டிக்கப்படலாம் என்றும் யோர்க் பிராந்திய பொதுச் சுகாதாரத் தளவாட விநியோகக் குழுவின் தலைவரான கேத்தி ஜெய்ன்ஸ் கூறினார்.

கருப்பொருள் சார் கேளிக்கைப் பூங்காவின் வாகன நிறுத்துமிடம் மக்களுக்கு ஓட்டுவதற்கு, தடுப்பூசி பெற, 15 நிமிடங்கள் காத்திருந்து வெளியேறவும் எட்டு வழிச்சாலையாக மாற்றப்படும் என்று ஜெய்ன்ஸ் கூறினார்.

ஜனவரி 21ஆம் திகதி கனடாவின் வொண்டர்லேண்ட் 2021 மே 14ஆம் திகதி பூங்காவை மீண்டும் திறக்கும் திட்டத்தை அறிவித்தது.