Reading Time: < 1 minute

தடுப்பூசி காலக்கெடு முடிவுக்கு வந்துள்ளதை அடுத்து, லண்டனின் முக்கிய மருத்துவமனை ஒன்று 84 ஊழியர்களை வேலையை விட்டு நீக்கியுள்ளது.

இது தொடர்பில் The London Health Sciences Centre தெரிவிக்கையில், தங்கள் மருத்துவமனையில் 99 சதவீத ஊழியர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளதாகவும், பொது நலனுக்கு எதிராக தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுத்துள்ள 84 ஊழியர்கள் வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

உயரிய காரணத்திற்காகவே மருத்துவமனையின் கொள்கையில் இருந்து விலகிய ஊழியர்களை வேலையை விட்டு நீக்கியதாக LHSC நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வேலையில் இருந்து நீக்கப்பட்ட 84 பேர்கள் அல்லாமல், இன்னொரு 5 மருத்துவர்களும் வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இந்த 84 பேர்களில் 33 செவிலியர்களும் 41 சுகாதாரத்துறை சாராத ஊழியர்களும் தடுப்பூசி காரணமாக வேலையை இழக்கின்றனர்.

மொத்தமுள்ள 9,148 ஊழியர்களில் 4,000 பேர்கள் செவிலியராக பணியாற்றி வருகின்றனர். இந்த வேலை நீக்க நடவடிக்கையால் அன்றாட பணிகள் எதுவும் பாதிப்புக்கு உள்ளாகாது என்றே LHSC நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.