Reading Time: < 1 minute

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சியை வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் வெற்றியுள்ள நிலையில் அந்த வெற்றி கனடாவின் பொருளாதாரத்திற்கு பாதக விளைவினை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்படுகிறது.

கனடாவின் கார்ல்டன் பல்கலைக்கழக துணைப் பேராசிரியர் இயன் லீ இந்த வெற்றி குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ட்ரம்பின் வெற்றி தென் எல்லை பகுதியில் கனடாவிற்கு பல்வேறு சவால்களை ஏற்படுத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக எல்லை தாண்டிய வர்த்தக நடவடிக்கைகளில் பாதக விளைவுகளை ஏற்படுத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.

கனடாவில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் மீது 10 முதல் 20 வீத வரி விதிக்கப்படலாம் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ட்ராம்பின் பொருளாதார கொள்கைகள் பொதுவாக கனடாவை பாதிக்கும் வகையில் அமையும் என அவர் எதிர்வுகூறியுள்ளார்.