அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை கையாள்வது சவால் மிக்கது என கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
கடந்த தடவை அவர் ஆட்சிப் பொறுப்பில் இருந்ததை விடவும் இம்முறை ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டதன் பின்னர் அவரை கையாள்வது சவால் மிக்கது என அவர் தெரிவித்துள்ளார்.
கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகள் மீது வரி விதிக்கப் போவதாக அண்மையில் டிரம்ப் அறிவித்திருந்தார்.
இது தொடர்பில் பல்வேறு தரப்பினரும் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
இவ்வாறான ஒரு பின்னணியில் ட்ரம்பை கையாள்வது தொடர்பில் கனடிய பிரதமர் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.
டிரம்ப் மற்றும் அவரது குழுவினர் இம்முறை தெளிவான திட்டங்களுடன் களம் இறங்கி இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
கனடா மீதான வரி விதிப்பு பொருளாதாரத்தில் பாரிய பாதிப்புகளை ஏற்படுத்த கூடும் என ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.