Reading Time: < 1 minute

கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அமெரிக்காவிற்கான பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியுள்ளார்.

கனடிய ஏற்றுமதி பொருள்களுக்கு வரி விதிப்பதாக புதிய அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அண்மையில் சமூக ஊடகம் வாயிலாக அறிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பு தொடர்பில் கனடாவில் பெரும் சர்ச்சை நிலைமை உருவாகி இருந்தது.

பல்வேறு மாகாணங்கள் இந்த வரி விதிப்பு காரணமாக பொருளாதார பாதிப்புகளை எதிர் நோக்க நேரிடும் என கருத்து வெளியிடப்பட்டிருந்தது.

இவ்வாறான ஒரு பின்னணியில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அமெரிக்காவிற்கு பயணம் செய்து புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சந்தித்திருந்தார்.

இது அதிகாரபூர்வமற்ற வகையில் இடம் பெற்றிருந்தது. இந்த சந்திப்பை முடித்துக்கொண்டு பிரதமர் ட்ரூடோ நாடு திரும்பியுள்ளார்.

எவ்வாறு எனினும் இந்த சந்திப்பின்போது வரி அறவீடு தொடர்பிலான எவ்வித உறுதி மொழிகளையும் டொனால்ட் டிரம்ப் வழங்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.