Reading Time: < 1 minute

டொரோண்டோ Etobicoke துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஹம்பர்லைன் ட்ரைவ் மற்றும் பின்ச் அவன்ய பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

அவச உதவி பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவருக்கு முதலுதவி வழங்கியுள்ளனர்.

எனினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாக அறிவித்துள்ளார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை. பதின்ம வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கான காரணங்கள் இதுவரையில் கண்டறியப்படவில்லை.

இந்த சம்பவம் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கோரியுள்ளனர்.