டொரோண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த திங்கள்கிழமை ஏற்பட்ட விமான விபத்திற்குப் பிறகு செயல்பாடுகள் தற்போது “வழமை நிலைக்கு” திரும்பிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த திங்கள்கிழமை பிற்பகல் 2 மணிக்குப் பிறகு டெல்டா ஏர் லைன்ஸ் விமானம் 4819, மினியாபொலிஸிலிருந்து புறப்பட்டு, மூன்றாம் முனையத்தின் ஓடுபாதையில் 23-ல் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளாகியது.
இதன் போது விமானம் தலைகீழாக கவிழ்ந்திருந்தது.
இந்த சம்பவத்தில் 21 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அனைவரும் தற்போது வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பியுள்ளனர்.
விமானத்தில் இருந்த அனைவரும் உயிரிழப்பின்றி உயிர் தப்பித்திருந்தனர்.
இந்த விபத்து காரணமாக, டொரோண்டோ பியர்சனில் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன மற்றும் பல நேரமாற்றங்களும் ஏற்பட்டன.
டொரோண்டோ பெரும்பாக விமான நிலைய அதிகாரிகள் X (முன்னாள் ட்விட்டர்) தளத்தில் வெளியிட்ட தகவலின்படி, இன்று 486 புறப்பாடு மற்றும் 500 வருகை விமானங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.
Comments are closed, but trackbacks and pingbacks are open.