Reading Time: < 1 minute

டொரொன்டோவின் லிட்டில் இத்தாலியில் உள்ள ஒரு முக்கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் டொரொன்டோ காவல்துறை தெரிவித்துள்ளது.

கொலெஜ் ஸ்ட்ரீட், பத்திருஸ்ட் ஸ்ட்ரீட் அருகே உள்ள முக்கட்டடத்தில் இரண்டு அலாரம் அளவிலான தீவிபத்து ஏற்பட்டதாக டொரொன்டோ தீயணைப்பு துறை தகவல் வெளியிட்டுள்ளது.

தீயணைப்பு அதிகாரிகள் மூன்று பேரை கட்டிடத்திலிருந்து மீட்டுள்ளதாகவும், ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக உறுதிப்படுத்தியுள்ளனர்.

மற்ற இருவர் சிறிய, உயிருக்கு ஆபத்தில்லாத காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கட்டிடத்தின் முதல் மாடி வணிக நோக்கத்திற்கும், இரண்டாம் மற்றும் மூன்றாம் மாடிகள் வீட்டு வசதிக்குமானவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீ விபத்து குடியிருப்பு பகுதியில் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.

தீயணைப்பு பணிகள் நடைபெறுவதால், கொலெஜ் மற்றும் கிளிண்டன் வீதிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக டொரொன்டோ காவல்துறை தெரிவித்துள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.