Reading Time: < 1 minute

டொரொன்டோவின் சில முக்கிய சுற்றுலா தளங்கள் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டள்ளது.

சீரற்ற வானிலை காரணமாக இவ்வாறு இன்றைய தினம் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டொரொன்டோ உயிரியல் பூங்கா (Toronto Zoo) இன்றைய தினம் (Sunday) சீரற்ற வானிலை காரணமாக மூடப்படும் என அறிவித்துள்ளது.

விலங்குகள், ஊழியர்கள், தன்னார்வலர்கள் மற்றும் விருந்தினர்களின் பாதுகாப்பிற்காக இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்கிறோம்,” என உயிரியல் பூங்கா வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், ராயல் ஒன்டாரியோ மியூசியம் (ROM) இன்றையதினம் சீரற்ற வானிலை காரணமாக மூடப்படும் என அறிவித்துள்ளது.

ஏற்கனவே நுழைவுச்சீட்டு கொள்வனவ செய்தவர்களுக்கு மீள அளிக்கப்படும் எனவும்,ஐந்து நாட்களில் இந்தப் பணம் அவர்களின் கணக்கில் வரவு வைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்ட் கேலரி ஒன்டாரியோ (Art Gallery Ontario) மற்றும் அகா கான் மியூசியம் (Aga Khan Museum) ஆகியவை பனிப்புயல் புயல் காரணமாக இன்று திறக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நான்கு சுற்றுலா இடங்களும் நாளைய தினம் மீண்டும் திறக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.