நோர்த் யோர்க் பகுதியில் உள்ள சட்டவிரோத கஞ்சா விற்பனை நிலையத்தில் சோதனை மேற்கொண்டு இரண்டு பேரை டொரண்டோ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து ஒர் கைத்துப்பாக்கி ஒன்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
ஜேன் வீதி Jane Street மற்றும் ஷெப்பர்ட் வீதிக்கு Sheppard Avenue West அருகே உள்ள வணிக நிறுவனமொன்றில் பொலிஸார் சோதனை மேற்கொண்டனர்.
சந்தேகநபர்கள் இருவரும் அங்கிருந்த பணியாளர்களாக தோன்றியதாக பொலிசார் தெரிவித்தனர். அவர்களில் ஒருவர் தப்பிச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.
இருவரும் கைது செய்யப்பட்டதுடன் கஞ்சா, பணம் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யும்போது, சந்தேகநபர்களில் ஒருவரிடம் சுடுவதற்கு ஆயத்த நிலையில் தோட்டாக்கள் ஏற்றப்பட்ட துப்பாக்கியொன்று இருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மொஹமட் அலி (29, டொரொண்டோ) மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன:
நாம் நியூகியென் (19, டொரொண்டோ) மீது கஞ்சா விற்பனை நோக்கில் வைத்திருந்த குற்றச்சாட்டு மற்றும் குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்ட சொத்துகளை வைத்திருந்த குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.