டொராண்டோவின் செயின்ட் லாரன்ஸ் வீதி மற்றும் ரிச்ச்மண்ட் வீதி கிழக்குப் பகுதியில், ஒரு பெண் தலையில் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சனிக்கிழமை காலை 10 மணியளவில், பொலிஸ் அவசர அழைப்புக்குப் பதிலளித்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்ததாக சமூக ஊடக பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தப் பெண் பலத்த காயங்களுடன் இருந்தாலும், உயிருக்கு ஆபத்தில்லை என மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர், சுமார் 30 வயதுள்ள பெண் என பொலிஸார் தெரிவித்தனர்.
குற்றம் சமத்தப்பட்ட நபர் கருப்பு தொப்பி, கருப்பு ஜாக்கெட், சாம்பல் நிற ட்ராக்பாண்ட்டும் வெள்ளை நிற நைகி ஷூவுமுடன் கடைசி முறையாக கிங் ஸ்ட்ரீட் கிழக்குத் திசையில் நடந்து சென்றதைக் கடைசி முறையாக பார்த்ததாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக மேலும் தகவல்கள் தெரிந்தவர்கள், டொராண்டோ காவல் துறையின் 51வது பிரிவு விசாரணை அதிகாரிகளை 416-808-5100 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.