கனடாவின் டொரன்டோ பகுதியில் வெறுப்புணர்வு குற்றச்செயல்களை தடுக்க விசிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்மைய நாட்களாக வெறுப்புணர்வு குற்ற செயல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து டொரன்டோ போலீசார் வெறுப்புணர்வு குற்ற செயல்களை தடுக்கும் பிரிவின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளனர்.
கடந்த அக்டோபர் மாதம் 7ஆம் திகதி இஸ்ரேல் ஹமாஸ் போர் தொடங்கியதன் பின்னர் குரோத அல்லது வெறுப்புணர்வு வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
எனவே இந்த குற்றச்செயல்களை தடுக்கும் நோக்கில் அதிக எண்ணிக்கையிலான போலீசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குற்றச் செயல்களை தடுத்து நிறுத்தவும் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தவும் அதிக எண்ணிக்கையிலான போலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் அமர்த்த படுபவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.