டொரன்டோவில் பாதுகாப்பு பெட்டகம் ஒன்றில் மீட்கப்பட்ட வெடி பொருட்கள் பாதுகாப்பான முறையில் வெடிக்கச் செய்யப்பட்டுள்ளது.
ரொறன்ரோ பொலிஸார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். தென் எக்லின்டன் வீதியில் அமைந்துள்ள கட்டிடம் ஒன்றில் இவ்வாறு வெடி பொருட்கள் வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பாதுகாப்பு பெட்டகம் ஒன்றில் இந்த வெடி பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த வெடிபொருட்களை டொமி டொம்சன் பூங்காவிற்கு எடுத்துச் சென்று அங்கு பாதுகாப்பான முறையில் வெடிபொருட்கள் வெடிக்கச் செய்யப்பட்டுள்ளன.
இந்த வெடிபொருட்கள் வெடிக்கச் செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் பாரிய சத்தம் எழும் என ஏற்கனவே அந்தப் பகுதியில் வாழும் மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது.
எவ்வாறான வெடி பொருட்கள் வெடிக்கச் செய்யப்பட்டன என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
Comments are closed, but trackbacks and pingbacks are open.