Reading Time: < 1 minute
பொது நூலகங்களை வாரத்தின் ஏழு நாட்களிலும் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. நகர முதல்வர் ஒலிவியா சொளவ் இது தொடர்பான திட்டத்தை முன்வைத்துள்ளார்.
எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அளவில் நகரின் 100 பொது நூலகங்கள் இவ்வாறு ஏழு நாட்களும் திறந்திருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
டொரன்டோவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
தற்பொழுது ஞாயிறு தினங்களில் பொது நூலகங்கள் மூடப்பட்டுள்ளன. எனினும் எதிர்காலத்தில் ஞாயிற்றுக்கிழமையும் பொது நூலகங்களை திறப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் சுமார் 81 வீதமான டொரன்டோ பிரஜைகள் பொது நூலகங்களை பயன்படுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.