Reading Time: < 1 minute

டொரண்டோவில் சட்டவிரோதமாக ஆயுதம் மற்றும் போதைப்பொருள் வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது நடவடிக்கை தொடர்பில் டொரண்டோ போலீஸ் சேவை (TPS) தெரிவித்ததாவது,

பார்க்டேலில், ஜேம்சன் அவென்யூ மற்றும் குயின் ஸ்ட்ரீட் வெஸ்ட் பகுதியில் உள்ள வீடொன்றில், பெப்ரவரி 23 அன்று மாலை 6 மணியளவில் அதிகாரிகள் தேடுதல் உத்தரவை அமல்படுத்தினர்.

அப்போது, வீட்டில் இருவர் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்களில் ஒருவரிடம் .45 கலிபர் Glock எனும் ஏற்றப்பட்ட அரைதானியங்கி துப்பாக்கி மற்றும் போதைப்பொருட்கள் இருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இரண்டாவது நபர் அனுமதியின்றி போதைப்பொருட்களை வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் சந்தேக நபர்கள் மீது சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருந்தமை, போதைப்பொருள்களை கடத்த முயன்றமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.