Reading Time: < 1 minute

ஞாபக மறதி நோயை கட்டுப்படுத்தக்கூடிய வழிமுறைகளை கனேடிய ஆய்வு மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

வயது மூப்புடன் ஏற்படக்கூடிய ஞாபக மறதி நோய்க்கு எவ்வாறு தீர்வு காணப்பட முடியும் என்பது குறித்து கனேடிய ஆய்வாளர்கள் ஆய்வு ஒன்றைய மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது உடற்பயிற்சி மற்றும் மூளை பயிற்சி என்பனவற்றின் ஊடாக ஞாபக மறதி நோயை கட்டுப்படுத்த முடியும் அல்லது ஞாபக மறதி ஏற்படுவதனை தாமதப்படுத்த முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

ஒன்றாரியோவின் லண்டனில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆய்வாளர் மொன்டிரோ ஒடாஸோ தலைமையிலான குழுவினர் இந்த ஆய்வினை மேற்கொண்டுள்ளனர்.

மருந்து மாத்திரைகளை விடவும் இந்த உடற்பயிற்சி மற்றும் மூளை பயிற்சி உண்டாக ஞாபக மறதி நோயை கட்டுப்படுத்திக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகிறது.