கனடாவில் ஜூலை 1ம் திகதி முதல் மொத்த கொரோனா கட்டுப்பாடுகளையும் நீக்க ஆல்பர்ட்டா மாநில நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
குறித்த தகவலை மாநில முதல்வர் Jason Kenney வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார். ஆல்பர்ட்டாவில் இதுவரை கொரோனா தடுப்பூசி பெற தகுதியான மக்கள் 70.2% பேர்கள் தங்கள் முதல் டோஸ் மருந்தை பெற்றுக்கொண்ட நிலையிலேயே,
ஆல்பர்ட்டா நிர்வாகம் சுகாதார கட்டுப்பாடுகளை மொத்தமாக தளர்த்த முடிவுக்கு வந்துள்ளது. ஜூலை 1ம் திகதி கனடா தினத்தை முன்னிட்டு, ஆல்பர்ட்டா மாநிலம் கொரோனா சுகாதார கட்டுப்பாடுகள் அனைத்தையும் நீக்க உள்ளது.
இதனால் ஆல்பர்ட்டா மக்கள் சாதாரண நிலைக்கு திரும்ப முடியும் என்பது மட்டுமின்றி, இனி சமூக கூடல்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களுக்கு உரிய நடைமுறைகள் கண்டிப்பாக பின்பற்றப்படும் என்றே மாநில முதல்வர் Jason Kenney தெரிவித்துள்ளார்.