கனடாவில் வானிலை மேம்படுவதால் எதிர்வரும் ஜூன் மாத ஆரம்பத்தில், சில தேசிய பூங்காக்கள் மீண்டும் திறக்கப்படும் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.
பல வாரங்களாக வீடுகளிலேயே முடங்கி கிடந்த மக்களுக்கு பிரதமர் ஜஸ்டினின் இந்த அறிவிப்பு புத்துயிர் அளித்துள்ளது.
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக, நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளை தளர்த்தும் அரசின் நோக்கத்தின் ஒரு பகுதியாக இது பார்க்கப்படுகின்றது.
இந்த அறிவிப்பின் மூலம், மக்கள் பசுமையான இடங்களை அணுக முடியும். இருப்பிடத்தைப் பொறுத்து பார்வையாளர்கள் மிதிவண்டி ஓட்டுதல் பாதைகள், சுற்றுலா மற்றும் கடற்கரை பகுதிகள், வரலாற்றுத் தளங்களில் மைதானம் மற்றும் படகு ஏவுதல்கள் அல்லது பிற நீர் அணுகல் பகுதிகளை பயன்படுத்தலாம்.
மேலும், சுற்றுலாத் தளங்கள் திறக்கப்படுவதால் பார்வையாளர்களை பாதுகாப்பதற்கான பொதுச் சுகாதார நடவடிக்கைகள் செயற்படுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது.