Reading Time: < 1 minute

காட்டுத்தீ காரணமாக பேரழிவினை சந்தித்த ஜாஸ்பர் நகருக்கு அந்த நகரை சாராதவர்கள் பிரவேசிக்க கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதேசத்தைச் சேர்ந்த மக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி அந்த நகரை சேர்ந்தவர்கள் மட்டும் நகருக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்றைய தினம் முதல் நகருக்கு பிரவேசிக்க முடியும் என அந்தப் பகுதியில் வாழ்ந்து வந்தவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

நகர மக்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜாஸ்பர் நகரத்தை சேர்ந்த மக்கள் தங்களது வதிவிட ஆதாரங்களை காண்பித்து நகருக்குள் பிரவேசிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நகரின் கிழக்கு நுழைவாயிலின் ஊடாக மட்டும் நகருக்குள் பிரவேசிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் தடவையாக இன்றைய தினத்தில் ஜாஸ்பர் நகரைச் சேர்ந்த மக்கள் மீண்டும் தங்களது சொந்த இடங்களுக்கு திரும்புகின்றனர்.

இந்த தருணம் ஓர் உணர்வுபூர்வமான தருணம் என தெரிவிக்கப்படுகிறது.

எனினும், ஜாஸ்பரை சேர்ந்த ஒருவருக்கு உதவி பெற்றுக் கொள்வதற்காக வெளிநபர் ஒருவரை அந்த பகுதிக்கு அழைத்துச் செல்வதற்காக விடுக்கப்படும் கோரிக்கைகள் நிராகரிக்கப்படாது என நகர நிர்வாகம் அறிவித்துள்ளது.