Reading Time: < 1 minute
கனடாவின் பிரதமர் ஜஸ்டின் லாவோசிற்கு விஜயம் செய்ய உள்ளார்.
லாவோசுடன் ராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்ட 50 ஆண்டுகள் பூர்த்தியாகும் நிலையில் முதல் தடவையாக கனடிய அரச தலைவர் ஒருவர் லாவோசிற்கு அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.
லாவோசில் நடைபெற உள்ள ஆசியான் மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் இவ்வாறு விஜயம் செய்கின்றார்.
ஆசியான் பிராந்திய வலய நாடுகளில் பொருளாதார ரீதியான பங்குதாரராக மாறும் அமைப்புகளில் கனடா ஈடுபட்டுள்ளது.
அந்த நோக்கின் ஒரு கட்டமாக பிரதமர் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றார்.
ஆசியான் பிராந்திய வலய நாடுகளில் சீனாவின் ஆதிக்கத்தை சமநிலைப்படுத்தும் நோக்கில் இவ்வாறு கனடா, பிராந்திய வலய நாடுகளுடன் கூடுதல் தொடர்புகளை பேண ஆர்வம் காட்டி வருகின்றது என தெரிவிக்கப்படுகிறது.