ஜப்பானில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கப்பலில் 251 கனேடியர்கள் உள்ளடங்குவதாகவும், அவர்களில் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதற்கான அறிகுறிகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களை கரைக்கு கொண்டு சென்று தற்போது சிகிச்சை வழங்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அவர்களின் நலன் மற்றும் சிகிச்சை குறித்து ஜப்பானிய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஜப்பானியத் துறைமுகமான யோகோகாமாவில் தரித்து நிற்கும் பயணிகள் கப்பலில் உள்ளவர்களில் குறைந்தது 10 பேருக்கு கொரோனா வைரஸ் உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டயமன்ட் பிரின்செஸ் என்ற அந்தக் கப்பலில் 3,700 உள்ளனர். தற்போது அவர்களுக்கான மருத்துவ பரிசோதனைகள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயரக்கூடும் என்று கூறப்படுகின்றது.
பாதிக்கப்பட்ட நோயாளிகளில் அவுஸ்ரேலியா, ஜப்பான், ஹொங்கொங், அமெரிக்கா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகள் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.